|
அண்ணாமலை பல்கலை.யில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விற்பனை தொடக்கம் |
|
|
|
|
Tuesday, 28 April 2009 15:12 |
|
சிதம்பரம், ஏப். 27: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளின் பல்வேறு வகுப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விற்பனையை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். முதல் விண்ணப்பத்தை பதிவாளர் எம்.ரத்தினசபாபதி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். படிப்புகள் விபரம்: பி.இ., பி.இ. பகுதிநேரம்., பி.பார்ம்., பி.பார்ம். லேட்டரல் என்டிரி, டி.பார்ம்., எம்.இ..எம்.டெக்., எம்.ஃபார்ம்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. இன்ஜியரிங் கோர்ஸஸ், பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை, எம்.பி.பி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்சி. நர்சிங், எம்.பி.டி., எம்.எஸ்.சி. நர்சிங், எம்.டி. எமர்ஜென்சி மெடிசின், எம்.எல்.சி. மெரைன், 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் மற்றும் சான்றிதழ் வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த படிப்புகள்.
|