Member Area

Adirampattinam.com - A community portal for Adiraitees

Monday
Sep 06th
Home News
The News
Ayesha Dental Clinic in Pattukottai PDF Print E-mail
Friday, 18 September 2009 20:09

அன்பிற்குரியவர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும், நமதூரை சார்ந்த சகோதரர்
டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் பட்டுக்கோட்டையில்
ஆயிஷா பல் மருத்துவமனையை
துவக்கியுள்ளார், அதுசமயம் நமதூரை
சார்ந்த அனைவரும் பயன் பெற்றுக் கொள்ளுமாறு
அனைவரையும் அழைக்கிறார்கள்
 
எம்பிபிஎஸ்-அனைத்து ஊனமுற்றோருக்கும் இடம் PDF Print E-mail
Saturday, 04 July 2009 14:15

சென்னை: எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள 35 ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கும் நிச்சயம் மருத்துவப் படிப்பு சீட் கிடைத்துவிடும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் ஊனமுற்றோர் பிரிவுக்கு 45 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே இந்த ஆண்டு ஊனமுற்றோர் பிரிவுக்கென வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள 35 மாணவர்களும் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும்.

Last Updated on Saturday, 04 July 2009 14:17
Read more...
 
உங்கள் ஒட்டு 49-0 - க்கே PDF Print E-mail
Thursday, 07 May 2009 09:25

அதென்னெங்க 49-O? தொடர்ந்து படிங்க... ஒவ்வுரு தேர்தலின் போதும் சுமார் 35, 40 பேர் ஒட்டு போடாம ஊட்டுலயே இருந்து விடுகிறார்கள். காரணம்? எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கலே. எல்லாருமே திருட்டு பசங்க தான் அப்படின்னு சொல்றாங்க. இத சும்மா டீக்கடையிலும், பஸ் ஸ்டாண்டிலும் சொல்லி வெட்டியாககம நேரடிய சம்பந்த பட்ட அரசியல் கட்சிகளுக்கே உறைக்கிற மாதிரி சொல்லவும் உள்ள சிறந்த வழி தான் இந்த 49-0.உங்கள் ஓட்டை இன்னொருத்தர் போடாம தடுக்கறதுக்கும் இந்த 49-0 உதவும். எப்படி?

Last Updated on Thursday, 07 May 2009 11:17
Read more...
 
இனி எல்லா வகை டவுன் பஸ்களிலும் ஒரே கட்டணம்!-'கலர்' ஏமாற்றம் நிறுத்தம்!! PDF Print E-mail
Thursday, 30 April 2009 12:11
சென்னை: தமிழகத்தில் மறைமுகமாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான டவுன் பஸ்களிலும் ஒரே மாதிரியான கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.

சாதாரண டவுன் பஸ்களில் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.2 ஆக இருந்தது. ஆனால் சொகுசுப் பேருந்து, தாழ்தள சொகுசுப் பேரூந்து, விரைவுப் பேருந்து, எல்எஸ்எஸ், எம் போர்ட், பாயிண்ட் டூ பாயிண்ட் என கலர் கலராக பஸ்களை விட்டு அதில் கட்டணமும் கண்ணாபின்னாவென உயர்த்தப்பட்டது.

சாதாரண பஸ்களை முடிந்தவரை குறைத்துவிட்டு மேலே சொன்ன பெயர்களைக் கொண்ட பஸ்களே அதிகமாக இயக்கப்பட்டன. இவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3 முதல் ரூ. 5 வரை போக்குவரத்து அதிகாரிகளின் மனத்துக்குத் தக்கபடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதனால் இந்த கலர் பஸ்சோ, தாழ்தளமோ வேண்டாம், சாதாரண பஸ்களையே அதிகமாக இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இத்தனை காலம் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது தமிழக அரசு.

இப்போது தேர்தல் வருவதால் மக்கள் கோரிக்கை காதில் விழுந்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி தாழ்தளமோ, சாதா பஸ்சோ அனைத்திலும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 ஆக இருக்கும். அடுத்து வரும் 2 ஸ்டேஜ்களுக்கு ரூ.1 வீதம் கட்டணம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் சென்னையில் ஏசி டவுன் பஸ்களில் வழக்கம் போல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

அடிக்கடி தேர்தல் வரலாம் போலிருக்கே..!
 
Voters will punish Lalu, Paswan: Nitish PDF Print E-mail
Sunday, 26 April 2009 12:54

Rated as one of the most popular state chief ministers in the country, Nitish Kumar has more than lived up to the promises he had made to the people of Bihar. Now, the senior Janata Dal (United) leader and Bihar chief minister is doing all he can to ensure that the National Democratic Alliance (NDA) comes to power in the center.

Nitish not only blamed the ruling United Progressive Alliance (UPA) government for the deteriorating law and order situation in the country but also called it the biggest impediment in the development of Bihar. Further, he minced no words in attacking Rashtriya Janata Dal’s Lalu Prasad Yadav and Lok Jan Shakti Party’s Ram Vilas Paswan, who have done little for the state despite holding ministerial posts in the center. Speaking to Arab News, Nitish explained his stand and spelled out his agenda.

Excerpts from an interview:

What has led to your growing disillusionment with the UPA government?

From Bihar’s point, the government at the center has been bunging a spanner at our every step. Also, our demand for ‘special package’ has been ignored.

After last year’s Kosi River floods, Prime Minister Manmohan Singh visited the state and described it as a national disaster. However, when it came to giving money for rehabilitation of the victims, nothing was provided. We have already submitted a rehabilitation plan but nothing has moved. This is just one instance of the center’s apathy toward Bihar.

But that’s not all. To a large extent, the Congress party is also to be blamed for the criminalization of politics in the country. The party has set this trend.

So, voters in Bihar are disenchanted...

Yes, by all accounts, voters in Bihar feel let down by the central government. And they will teach Lalu Prasad Yadav and Ram Vilas Paswan, who were ministers in the central government, a lesson at the hustings.

You have previously attacked Lalu for the state of affairs in Bihar when he was chief minister...

There was no law and order during the 15 years of Lalu-Rabri regime. Lalu talked a lot about empowering Muslims but did nothing concrete for them. Among others, I gave the state its first Muslim home secretary, Afzal Amanullah. The riot victims never used to get justice but 20 people have been awarded life term in Bhagalpur riot cases in my tenure.

Compensations have been given to the riot victims and steps have been taken to return properties to the rightful owner.

Moves like this have instilled a sense of security among Muslims. What’s more, law and order has improved. Criminals are on the run and people have started venturing out at night.

People have understood that Lalu and Paswan, who aroused caste sentiments and totally ignored key developmental issues, misled them. So, in this election, they have decided to punish them.

Clearly, you do not see much hope for the Rashtriya Janata Dal-Lok Jan Shakti Party alliance in this election.

There is strong anti-Lalu and anti-Paswan wave blowing across Bihar. The RJD-LJP alliance will be uprooted in this election. Just as the people of Hajipur were determined to elect Paswan in 1977, they are determined to defeat the LJP chief this time.

 

Will things change if the NDA comes to power?

Yes, if the NDA government comes to power, Bihar would certainly get a ‘special package’ to accelerate the pace of progress. I have even discussed this with NDA leader L.K. Advani and he has agreed to it. If things go as planned, Bihar will become a prosperous and model state.

How do you react to Bharatiya Janata Party leader Varun Gandhi’s inflammatory remarks against Muslims?

I would have taken immediate and stern legal action against Varun if he had made anti-Muslim remarks in Bihar.

 
இலங்கை சண்டையில் 1000 அப்பாவி தமிழர் சாவு PDF Print E-mail
Wednesday, 22 April 2009 11:30

கொழும்பு, ஏப். 21: இலங்கை ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 2300 பேர் காயம் அடைந்துள்ளனர் எனறு விடுதலைப்புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அதன் முக்கிய நிர்வாகி பூலிதேவன் கூறியதாவது: வலைஞர்மடம் மற்றும் மாத்தளன் பகுதிகளில் முன்னேறிச்செல்லும் இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களை கேடயமாகப் பிடித்து வைத்துள்ளது. திங்கள்கிழமை நடந்த சண்டையில் சுமார் 1000 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். சுமார் 2300 பேர் காயம் அடைந்துள்ளனர்.  உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகள், நாபாம் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது என்றும் தான் விடுத்த அறிக்கையில் பூலிதேவன் தெரிவித்தார்.  கெடு புறக்கணிப்பு: இதனிடையே, சரணடையுமாறு இலங்கை விதித்த 24 மணி நேர கெடுவை விடுதலைப்புலிகள் புறக்கணித்தனர். இதையடுத்து புது தாக்குதல்களை செவ்வாய்க்கிழமை தொடங்கிய இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த புதுமாத்தளன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.  இலங்கையின் வடக்கே நடக்கும் இந்த போரை அடுத்து போர்ப்பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அங்கிருந்து வெளியேறுவதாக இலங்கை தெரிவித்துள்ளது.  பிரபாகரனுக்கு விதித்த கெடுகாலம் முடிந்த சில நிமிடங்களில் இலங்கைப்படைகள் புதுமாத்தளன் மருத்துவமனையை கைப்பற்றியது. பாதுகாப்புப் பகுதிக்குள்ளும் ராணுவம் நுழைந்தது என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  17 சதுர கிலோமீட்டர் பகுதிக்குள் புலிகளின் ஆதிக்கம் சுருங்கிவிட்டது. அந்த பகுதிகளுக்குள்ளும் ராணுவம் நுழைந்துவிட்டது. போர்ப் பகுதிகளிலிருந்து இதுவரை தப்பிய தமிழர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை எட்டிவிட்டது.  அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்த வகையில் செயல்படுகிறோம். போர் நிறுத்தத்துக்கு தயார் என்று மட்டுமே புலிகள் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆயினும் புலிகள் சரணடைய வேண்டும் என்று ராஜபட்ச விடுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.  பாதுகாப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அனைவரையும் மீட்ட பிறகு பிரபாகரனும் அவரது ஆதரவாளர்களும் ஆயுதங்களை ஒப்படைத்தே ஆகவேண்டும். இதற்கும் அவர்கள் மசியாவிட்டால் வேறு என்ன செய்வது என்பதை அரசு பரிசீலிக்கும். பிரபாகரன் மீது எத்தனையோ வழக்குகள் உள்ளன. அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டிவரும் என்று ராஜபட்ச தெரிவித்துள்ளார்.  மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனை ஒப்படைக்கும்படி இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்ததாக இலங்கை பத்திரிகையான தி டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.  தீவிரவாதத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி:இன்னும் சில தினங்களுக்குள் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  பாதுகாப்பு பகுதிகளை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. புலிகள் இயக்கத் தலைவர்கள் ஒன்று சரணடையவேண்டும் அல்லது சாகவேண்டிவரும் என்றார் பொன்சேகா.

Thanks
Dinamani

Last Updated on Wednesday, 22 April 2009 11:33
 
இந்தியா ஏழை நாடு அல்ல ! PDF Print E-mail
Saturday, 18 April 2009 14:13
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகத்துஹூ
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும்,,,,
 
 
நாம் அனைவரும் நிணைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இந்தியா ஏழை நாடு அல்ல. ஆமாம். 100 சதவிகித 'அக்மார்க' உண்மை
நம்ப முடியவில்லையா?..தொடர்ந்து படியுங்கள்.

 

இந்திய மக்களிடமிருந்து ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து,  கணக்கு காட்டாமல் சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு  (Swiss Banking Association) தனது ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது
.
 
இந்த தொகை உலக வங்கி (World Bank), உலக நிதி நிறுவனம் (Internationala Monetary Fund), மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது வளர்ச்சி திட்டங்களுக்கக வாங்கியிருக்கும் வெளிநாட்டு கடனின் மொத்த மதிப்பைவிட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்தப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் 'யோக்கிய சிகாமனிகள்' யார் தெரியுமா
?
 
நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட     .ஏ.எஸ்ஐ.பி.எஸ்மற்றும் 
 அரசியல்வாதிகள்

(அரசியல்வாதிகளுக்குத்தான் இதிலும் முதலிடம்.)
 
உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்திய வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020 ஆண்டு, இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு காணச்சொல்லியிருக்கிறார். ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த விஷயம், ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத இந்தியாவின் வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும் என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது
,
 
சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு தங்கம் பெற்ற இந்தியா, ஸ்விஸ் வங்கியில் 'கள்ள' கணக்கு வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளில் - முதலிடத்தை தட்டி செல்கிறது
.
1.
இந்தியா---- $1,456 billion

2.
ரஷ்யா---$ 470 billion

3. UK -------$390 billion
4.
உக்ரைன் - $100 billion

5.
சீனா -----$ 96 billion

 
அது மட்டுமல்ல, இந்தியாவின் வைப்புத்தொகை ($1456 பில்லியன்) - மற்ற நான்கு நாடுகளின் மொத்த வைப்புத்தொகையை ($1056 பில்லியன்) விட அதிகம்.

 
இந்த பணத்தை இந்திய மக்களுக்கு பிரித்துக்கொடுத்தால், 45 கோடி பேருக்கு - ஒவ்வொருவருக்கும் 1,00,000 ரூபாய் கிடைக்குமாம்..

 
இந்திய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை, இந்தியா சட்ட \ரீதியாக நடவடிகையெடுத்து மீண்டும் $1456 பில்லியன் பணமும் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டால் ஒரே நாளில் நமது வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு, மீதியிருக்கும் பணத்தை Fixed Deposite -ல் போட்டால், அதிலிருந்து வரும் வட்டி - இந்திய அரசின வருடாந்திர 'பட்ஜெட்' க்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக கிடைக்குமாம். அதனால், துண்டு விழாத பட்ஜெட் போடலாம், புதிய வரிகள் போடுவதை தவிர்க்கலாம்
,
 
வறுமைகோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களை அப்படியே 'அலாக்'காக துக்கி (வறுமை) கோட்டுக்கு மேலே வைத்து 'கோட்டும்- சூட்டும்' போட்டு பார்க்கலாம்.
 

இந்த அனைத்து தொகைகளையும் திரும்ப கொண்டுவர வேண்டும் என்று அத்வானியைத் தவிற மற்றவ‌ர்கள் வாய்மூடி மவுனம் காப்பதுதான் அதிசயமாக உள்ளது. (அத்வானியை குறிப்பிடுவதால் சிலர் தறாக புறிந்து கொள்ளக் கூடும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சைத்தானும் சில நேரங்களில் நல்ல விஷயங்களை சொல்வான் என்பதற்கு இதுதான் உதாரணம்)
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 Next > End >>

Page 1 of 9
Banner

Archive

JoomlaWatch Stats 1.2.8b_12-dev by Matej Koval

User Online

No users online

Advertise here...Contact webmaster for more details